காதலின் மீதியோ நீ-24
காதலின் மீதியோ நீ-24
நித்ரா சென்னைக்கு வந்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது.
தனமும் நித்ராவும் தனியாக இருக்க வேண்டாம் என்று அந்த வீட்டை காலி செய்துவிட்டு ருக்மணி வீட்டிற்கே வந்துவிட்டனர்.
நித்ரா சென்னை வந்ததும் செய்த முதல் வேலை மித்ராவிடம் தனது ரெசூமைக் கொடுத்து எனக்கு வேலை வேண்டும் என்று சொன்னதோடு அதற்காக என்னென்ன செய்யணுமோ எல்லாவற்றையும் தயாராக்கினாள்.
மித்ராவும் மோகனும் அவளோடு பேசினார்கள்.
“எதுக்கு இப்போ வேலைக்குப் போற?கொஞ்சநாள் வீட்டுல இரேன்.டெலிவரிக்கு அப்புறமா வேலைக்குப் போகலாம்”என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தனர்.
நித்ரா சொன்னது ஒன்று மட்டும்தான்”என் மனசு இப்போ என் கண்ட்ரோல்ல இல்லக்கா.எனக்கு ஆயுஷ் வேணும்னு இருக்கு. ஆனால் அதையும் மீறி பிரிஞ்சு வந்திருக்கேன். இப்படியே சும்மா இருந்தா செத்திருவேன்கா”என்று அழுதாள்.
இதற்கு மேல் அவளிடம் பேச முடியாது பேசினாலும் அவள் மனது வருத்தப்படும் என்று நினைத்த மித்ரா தனது கம்பெனியிலயே அவளது பயோடேட்டாவைக் கொடுத்து வேலைக்கு ரெடி பண்ணியிருந்தாள்.
ஒரே வாரத்தில் மித்ராவோடு நித்ராவும் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.
எதையும் யாரையும் கண்டுக்கொள்ளாது சந்தோசமாக இருந்த அந்த நித்ரா காணாது போயிருந்தாள்.
இப்போது இருப்பது ஆயுஷின் உயிரானாவள்.அவனைப்பிரிந்து அரையுராக இருக்கும் ஒருத்தி!
எப்போதும் போல வேலைக்குப் போனவள் தனது வேலையில் மும்முரமாக இருந்தாள்.
அன்று காலையில் இருந்தே அவளது மனம் கொஞ்சமே கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.அவளது வயிற்றில் உள்ளக் குழந்தையும் துள்ளியது.
அவளும் மித்ராவும் இப்போது ஒன்றாக உட்கார்ந்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
எல்லா பெண்களும் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஹேய் வடக்கன் ஒருத்தன் சீனியர் இஞ்சினியரா வந்திருக்கான்பா. செமையா இருக்கான்.ஆளு அவ்வளவு ஹேண்ட்ஸமா இருக்கான். நம்ம ஆபிஸ்ல இருந்து எவ அவனைக் கொத்திட்டுப் போகப்போளோ”என்று பேசிக்கொண்டிருந்தனர்.
“யாரு கொத்திட்டுப் போவான்னு சொல்லாதிங்கடி.அதை நம்ம கம்பெனியோட எம்.டி பொண்ணு தீபாவே கொத்திக்கும். அதுதான் காலையில் இருந்தே அவன் கூடத்தான் சுத்திட்டிருக்கு” என்று பேச்சு போய்கொண்டிருந்தது.
ஏற்கனவே எம்.டி பொண்ணோட தலையீடு கம்பெனியில அதிகமாகத்தான் இருக்கும். இப்போ இதுவேறையா என்று நினைத்தவள் சாப்பிட்டு எழுந்து கைகழுவப்போனாள்.
அப்போது ஆயுஷோட குரல் கேட்பதுபோன்றே அவளுக்குத் தோன்றியது.அதனால் நின்றுக் கவனித்தாள்.
அது அவளது மனப்பிரம்மையோ என்றும் யோசித்தவள் தனது இடத்திற்குபோய் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
மீண்டும் அவனது குரல் காதுக்குள் கேட்பதுபோன்றே இருந்தது.
உடனே எழுந்துப்போய் மித்ராவிடம் நின்றவள்”மித்துக்கா எனக்கு ஆயுஷோட சத்தம் திடீர்னு காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு. இது எதுவும் மனப்பிராந்தியா இருக்குமோ. டாக்டர்கிட்ட போயிட்டு வரலாமா?”என்று யாருக்கும் கேட்காத வண்ணம் பேசினாள்.
“என்னடி உளறிட்டிருக்க? டெல்லியில் இருக்கிறவரு சத்தம் இங்க எப்படிக் கேட்கும்?.எப்போதும் அவரு நினைப்புலயே இருக்கிறதுனால அப்படித் தோணுமா இருக்கும்டி. கொஞ்சம் கண்ணை மூடி அமைதியாக உட்காரு. அதெல்லாம் மனப்பிராந்தி”என்று தங்கையை சமாதானாப்படுத்தினாள்.
“ப்ச்ச் நீ வேற என்னைக் குழப்பாதக்கா?வா இப்போவே ஹாஸ்பிட்டல் போவோம்”
“அப்போ போய் பெர்மிஷன் கேட்டுவா.நம்ம போவோம்”
ம்ம்ம் சரிக்கா என்று போனவள் சீனியர் இஞ்சினியர் இருக்கும் கேபின் கதவைத் தட்டினாள்.
“எஸ்”என்று கேட்டதும் உள்ளே போனாள்.
இப்போதான் அந்த குரலை உணர்ந்தவள் “இது இது ஆயுஷ் குரல்ல? என்று யோசித்தாவாறே உள்ளேபோய் பார்த்தாள்.
அங்கே சீனியர் இன்ஞ்சினியர் சேரில் சாட்சாத் அவளது ஆயுஷ் தான் உட்கார்ந்திருந்தான்.
நெடுநாளைக்குப் பின்னான அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு தன்னையறியாது கண்ணீர் வந்துவிட்டது. அப்படியே அவனைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.
அவள் அசையாது நிற்கவும் “ஹலோ என்னாச்சு? யாரு நீங்க? உள்ள வந்துட்டு அமைதியாக நின்றால் எப்படி? ஏதாவது பேசுங்க”என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
அதில் சட்டென்று உணர்வுக்கு வந்து நிதானாமானவள் அப்படியே அவனைப் பார்த்தவாறே பின்னாடியே வந்து மித்ராவின் அருகில் வந்து ஒருமாதிரியாக நின்றாள்.
அப்போதுதான் மித்ரா போனில் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றுவிட்டு வைக்கவும் அவள் வந்து நிக்கவும் சரியாக இருந்தது.
“என்னடி லீவு கேட்கப்போன இப்போ இப்படி வந்து நிக்கிற? ஹாஸ்பிட்டல் போகவேண்டாமா?”என்று பாசப்பறவை அக்கா கேட்டதும் உன்னை அக்கான்னு பார்க்கிறேன் இல்லை செவுள்லயே ஒன்னுவிடுவேன் பார்த்துக்க. அங்க ஆயுஷ் உட்கார்ந்திருக்காரு அவரு எப்படி இங்க வேலைக்கு வந்தாரு? வேலைக்கு வந்தாரா இல்லை விலைக்கே வாங்கிட்டாரா?”
“ப்ச்ச் என்கிட்ட கேட்டா எப்படிடி. அவர் வேலைக்கு வந்தது எனக்கு தெரியாது நீ இப்ப சொல்லிதான் தெரியுது எனக்கு காலைல சீனியர் இன்ஜினியர் ஒருத்தர் வந்து இருக்காருன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அது யாருன்னு தெரியாது இப்ப நீ சொன்ன பிறகுதான் தெரியுது இந்த வேலைக்கு வந்தாரு அவருக்கு இந்த வேலைக்கு வரவேண்டிய அவசியமே இல்லையே?”
“அந்த ஹேரைத்தான் நானும் கேட்கிறேன்.அவ்வளவு பெரிய கம்பெனிய விட்டுட்டு அந்த வெள்ளைக்கரடி ஏன் இங்க வந்துச்சுன்னு.போய் கேட்டுட்டு வந்துச் சொல்லு போ”
“அப்புறம் ஹாஸ்பிட்டல் போகணும்னு சொன்னலாடி?”
“அக்கா கடுப்பேத்தாத காலையில் இருந்து அந்தக் பனிக்கரடி குரல் நிஜமாகத்தான் கேட்டிருக்கு.அது என் மனப்பிரம்மையில்லை. போதுமா”
“க்கும் ஏன்டி உனக்கும் அவருக்கும்தானடி பிரச்சனை என்னை எதுக்குடி கடிச்சுத் துப்புற?”
“இங்க எதுக்கு அவன் வந்தான்னு கேட்டுச் சொல்லு”
“என்னடி மரியாதை இல்வாமல் பேசுற.அவர் உன்னவருடி”
“ஒரு அவரும் இல்ல.அதுதான் மியூட்சுவல்ல பிரியப்போறோமே”
“அப்போ உண்மையா அவரு உனக்கு வேண்டாமா?”
“ப்ச்ச் வேற ஏதாவது பேசுக்கா”
“போய் உன் இடத்துல உட்கார்ந்து உன் வேலையைப் பாரு.சம்பளம்னு ஒன்னு வாங்குறோம்ல அதுக்கு வேலைப் பார்க்கணும்ல”
ம்ம்ம் போறேன் என்று போய் உட்கார்ந்தவளுக்கு வேலையே ஓடவில்லை.அவளது கண் நொடிக்கு ஒரு தடவை ஆயுஷ் இருக்கும் கேபினைத்தான் பார்த்தது.
இவனை பார்க்கமல் இருக்கணும்னு நானே இங்க வந்திருக்கேன்.வாலைப்பிடிச்சுட்டு இவனும் இங்க வந்திருக்கானே என்று வேதனைப்பட்டாள்.
“அதற்குள் இங்கேயும் ஒரு ப்யூன் வந்து உங்களை சீஃப் இன்ஞ்சினியர் சார் கூப்பிடுறாங்க”என்று சொல்லிவிட்டுப் போனான்.
மறுபடியும் முதல்ல இருந்தா என்று நினைத்தவளுக்கு பழைய ஞாபகங்கள் கண்முன் வந்தது.அது அவளை கண்கலங்க வைத்திருந்தது.
அதை மறைத்து அவனது கேபின் கதவைத் தட்டி உள்ளே போனாள்.அங்கே அவனருகில் எம்.டி பொண்ணு தீபா உட்கார்ந்திருந்தாள்.
இவளைப் பார்த்ததும் “வாங்க நித்ரா? உங்களுக்கு அடுத்தமாசம் ட்யூ டேட்டுல.அப்போ லீவுல போவேங்கள்ல அதுக்கு முன்னாடி என்னென்ன முடிக்கணுமோ முடிச்சு வைச்சிடுங்க .உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு வேலை அலாட் பண்ணிருக்கோம். இந்த ஒரு மாசமும் இங்க உள்ள ப்ராஜெக்ட் என்னென்ன போகுதுன்னு சாருக்கு கைட் பண்ணனும் அவ்வளவுதான். ஒன்ஸ் அவரு பிக்கப் பண்ணிட்டாருன்னா அவரு பார்த்துப்பாரு அவ்வளவு தான்”
‘ஏது இவனுக்கு நான் சொல்லிக்குடுக்கணுமா? போடி போடி பைத்தியக்காரி அவன் இந்த தொழில்ல பழம் திண்ணுக் கொட்டைப் போட்டவன். உனக்கும் உங்கப்பனுக்குமே பாடம் எடுப்பான். நீ வந்து அவனுக்கு அசிஸ்ட் பண்ண என்கிட்டச் சொல்லுற பார்த்தியா’என்று தீபாவை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தாள்.
அந்தப் பார்வை அர்தத்தைப் புரிந்துக்கொண்ட ஆயுஷ் மெதுவாக அவளை பார்த்து புன்னகைத்தவன் தனது உதட்டில் கைவைத்து எதிரில் நிற்கும் நித்ராவுக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை செய்தான்.
அதைப்பார்த்த நித்ராவோ கண்டுக்காது நின்றிருக்க தீபாவோ ஆயுஷ் “உங்களுக்கு இந்த ஆபிஸ் பிடிச்சிருக்கா? நீ இதைவிட பெரிய ஆபிஸ்ல வேலைப் பார்த்ததாகச் அப்பா சொன்னாங்க” என்று அவனது தோளில் கைவைத்து சகஜமாகப் பேசினாள்.
ஆயுஷும் தீபாவின் முகத்தைப் பார்த்து எஸ் இதைவிட ரொம்பப் பெரிய ஆபிஸ்ல வேலைப் பார்த்தேன் என்று அழுத்திச் சொன்னான்.
தேட்ஸ் நைஸ் ஆயுஷ் என்று மீண்டும் அவனது தோளில் கைவைத்து அழுத்திப் பேசிக் கொண்டிருந்தாள்.
இதுக்குமேல இங்க நின்னா சரிவராது என்று மெதுவாக நித்ரா வெளியே வந்தாள்.
அவளது முகமே அவளின் கோபத்தின் அளவைச் சொன்னது. இந்த வெள்ளைக் கரடி நான் விவாகரத்துக் கொடுத்து பிரிஞ்சு விலகி வந்ததும் ரொம்ப பொண்ணுங்ககிட்ட வழிஞ்சுப் போசுறானோ? இது சரியில்லையே!என்று வேகமாக நடந்து மித்ராவின் அருகில் வந்தாள்.
“இப்போ என்னடி உனக்குப் பிரச்சனை.அதுதான் ஆயுஷோட உண்மையான சத்தம்னு தெரிஞ்சுப்போச்சே.வேற என்னடி வேணும்?”
“நீ என்கூட வா.அந்த தீபா அவன் தோளில் கைப்போட்டு பேசுறா”
“ஆமா எவா அவன் தோளிலே கை போட்டு பேசுனா உனக்கு என்னடி வந்தது? நீ உன் வேலையை பாருடி”என்று மித்ரா கடுப்பாகி சொன்னாள்.
முதல்ல அந்த வெள்ளை கரடி நம்ம ஆபீஸ்க்கு வேலைக்கு வந்ததே தப்பு. நீ இங்க வேலைக்கு சேர்ந்தது இரண்டாவது தப்பு . அதைவிட அந்த தீபா கைப்போட்டது விட்டது மூன்றாவது தப்பு அவனை உடனே இங்கே இருந்து போக சொல்லு. எனக்கு கோவம் வருது” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினாள்.
அவள் கத்தியதில் எல்லோரும் திரும்பிப் பார்க்க உள்ளேயிருந்து தீபாவும் ஆயுஷூமே என்ன சத்தம் என்று எட்டிப் பார்த்தனர்.
அதைப் பார்த்ததும்தான் “ஆகா கோபத்துல ரொம்பக் கத்திட்டோமோ?” என்று அமைதியாகப் போய் உட்கார்ந்து விட்டாள்.
ஆனாலும் அவளது மனது ஊமையாக அழுதுக் கொண்டிருந்தது.அங்கே இருப்பது தன்னவன்.தனக்கானவன். அவனிடம் போய் பேசமுடியாது எது தடுக்கிறது உனக்கு? என்று மனமே கேள்வி எழுப்பியது.
இதுவரைக்கு அனுபவிச்ச வேதனைப்போதாதா? அவன்கிட்டயிருந்து மொத்தமாகப் பிரியனும்னு முடிவு எடுத்துதானே பிரிஞ்சு வந்த? உன் குழந்தைக்காகன்னு வந்தியே. அப்போ அப்படியே இருக்கவேண்டியதுதான்! ஏன் இப்படி தவியா தவிக்கிற?”என்று மனதிற்குள் புலம்பியவளுக்கு அவனது கைவளைவிற்குள் இருக்குவேண்டும் என்று ஆசையாக வந்தது.
அவளது உயிர்க்காதலன் அல்லவா? எத்தனை தூரமாக அவனைப் பிரிந்திருக்க நினைத்து விலகுகிறாளோ அத்தனைப் பக்கமாக மனதளவில் அவனிடம் மிகவும் நெருங்குகிறாளே!
உடனே மெயிலில் பெர்மிஷன் போட்டுவிட்டு மித்ராவிடமும் சொல்லாது வெளியே போய்விட்டாள்.
அவளது மெயிலைப் பார்த்துவிட்டு ஆயுஷ் வெளியே வந்து அவளைப் பார்ப்பதற்குள் போய்விட்டாள்.
“ஏன் இப்படி தவிக்கணும்? உன் புருஷன் உன் புருஷனாகவேதானே இருக்கிறேன். என்னைப் பார்த்ததும் ஓடிவந்துக் கட்டிப்பிடித்து என் நெஞ்சில் சாய்ந்துக்கொள்ள உன்னை எது தடுக்கிறது?பயமா?” என்று வேதனையோடு நினைத்தவன் அவளைத் தேடி வெளியே வந்தான்!
இருவருக்குள்ளும் அளவில்லாத நேசம் ஒருவர் மீது ஒருவருக்குக் கொட்டிக்கிடக்கு.அந்த நேசம்தான் இப்போது விலகியும் நிறுத்தியிருக்கு!